கூடவே இருந்து பேராசை வளர்த்த தோழி.. அசந்த நேரத்தில்.. கோடி கணக்கில் அபேஸ் - ஆண் நண்பர்களோடு எஸ்கேப்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகே, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கும், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வர்ஷினி என்ற பெண்ணிற்கும் இடையே, தொழில் சம்பந்தமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்த வர்ஷினி, அவருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதில் ராஜேஸ்வரி மயங்கிய நிலையில், வர்ஷினி, அவரது நண்பர் அருண்குமார் மற்றும் கார் ஓட்டுநர் நவீன் குமார் ஆகியோர், வீட்டில் இருந்த 100 சவரன் தங்கம், வைர ஆபரணங்கள் மற்றும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்போன் சிக்னலை வைத்து காட்டூர் கிராமத்தில் பதுங்கியிருந்த அருணகுமார் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த பிரவீன், சுரேந்தரை ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வர்ஷினி மற்றும் அவருடைய கார் ஓட்டுநர் நவீன் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com