"முடிஞ்சா என்மேல ஏத்துங்க..." - பஸ் முன் படுத்த பெண்ணால் பரபரப்பு | Dindigul |

x

வத்தலக்குண்டு அருகே இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தீபாவளியன்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, கண்ணன் என்பவரை இன்று அதிகாலை நான்கு முப்பது மணியளவில் போலீசார் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் கொடைக்கானல் ரோடு, பழைய வத்தலக்குண்டு பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்