குபுகுபுவென பருத்தி மூட்டையுடன் எரிந்த லாரி...தீயில் கருகி 25 டன் பஞ்சிகள் நாசம் | Erode | Fire

x

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பருத்தி மூட்டைகள் ஏற்றி சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 25 டன் பருத்தி தீயில் எரிந்து சேதமாகியது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சத்தியமங்கலத்திற்கு பருத்தி மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி, ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக லாரியில் தீ பிடித்துள்ளது. மளமளவென பற்றிய தீ லாரி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. தகவலின் பேரில், அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் 25 டன் பருத்தி தீயில் எரிந்து நாசமானது.


Next Story

மேலும் செய்திகள்