இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கைது

x

கும்பகோணத்தில் காவி உடையில் அம்பேத்கர் போஸ்டரை ஒட்டிய விவகாரத்தில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குருமூர்த்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அம்பேத்கர் காவி உடையில் இருப்பது போன்று, ஒட்டப்பட்ட போஸ்டர் தொடர்பாக, இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தியை கைது செய்த போலீசார், 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தியனர். இந்நிலையில், வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, கும்பகோணம் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்