மூதாட்டியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த பெண் ஆய்வாளர் - மிரண்டு பார்த்த மக்கள்

x

சென்னையில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய பெண் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சென்னை மந்தைவெளி ராஜாகிராமணி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் 74 வயது மூதாட்டி கௌசல்யா. இவரிடம் சொத்தை பிரித்து தரக்கூறி பிள்ளைகள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் வேதனைக்குள்ளான மூதாட்டி, வீட்டு மாடிக்கு சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு சென்ற பட்டினம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, தீயணைப்புத்துறையினரின் உதவியோடு மூதாட்டியை பத்திரமாக மீட்டார். மூதாட்டியை பத்திரமாக மீட்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்