6 மணி நேரம் விடாது பெய்த மழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் | TN Rain | Rain

x

6 மணி நேரம் விடாது பெய்த மழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் 6 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் சுமார் 2 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை கொட்டி தீர்த்தது. வேப்பனப்பள்ளி குந்தாரப்பள்ளி குருபரப்பள்ளி சின்னாறு, சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ந்த சீதோசன நிலவியதால், பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்