படிக்க சொல்லி கண்டித்த தாய்... யாரும் எதிர்பாராத வகையில்... விபரீத முடிவெடுத்த 6ம் வகுப்பு மாணவன்

x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சரியாக படிக்காத மகனை தாய் திட்டியதால், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே குடிமேணஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி கணேசன் மற்றும் முருகம்மாள். இவர்களின் மகன் லோகேஸ்வரன், அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பள்ளியில் நடத்த பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில், லோகேஸ்வரனின் தாயிடம் பள்ளி ஆசிரியர் புகாரளித்துள்ளனர். இதன்பின்னர், வீடு திரும்பிய முருகம்மாள், மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த லோகேஸ்வரன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்