"2 கி.மீ-க்கு அப்பால் ரேசன் கடை... பொருட்கள் வாங்க ஆற்றை கடந்து செல்கிறோம்" - அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை

x
  • கிருஷ்ணகிரி அருகே 20 ஆண்டுகளாக ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து, இடுப்பளவு நீரில் ஆற்றைக்கடந்து ரேசன் கடைக்கு செல்ல இருப்பதால், கிராமத்திற்குள் பகுதி நேர ரேசன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
  • வேப்பனப்பள்ளி அடுத்த தோட்டக்கணவாய் கிராமத்தில் 180 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
  • இந்த கிராமத்தில் வசிக்கும் 180 குடும்பத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அருகே உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேசன் பொருள்களை வாங்கி வருகின்றனர்.
  • தோட்டக்கணவாய் கிராமத்தில் இருந்து சிகராமகானப்பள்ளி கிராமத்திற்கு 2 கிலோமீட்டர் ஒத்தையடி பாதையில் நடந்து சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர்.
  • மழை காலங்களில் ஆபத்தான முறையில் ஆற்றைக்கடந்துசெல்ல வேண்டி இருப்பதால்,தோட்டக்கணவாய் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்