துணி துவைத்த போது தகராறு... ராணுவ வீரரை அடித்து கொன்ற கவுன்சிலர்

x
  • கிருஷ்ணகிரி அருகே தண்ணீர் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.
  • போச்சம்பள்ளி வேலம்பட்டியை சேர்ந்த சின்னசாமி என்பவர், நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார்.
  • அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிரபாகரன், பிரபு இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
  • தண்ணீர் தொட்டியில் துணி துவைத்தது தொடர்பான தகராறில், பிரபாகரனை கவுன்சிலர் சின்னசாமி தனது உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் சென்று தாக்கியுள்ளனர்.
  • தடுக்க சென்ற பிரபுவையும் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ராணுவ வீரர் பிரபு, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
  • இந்த வழக்கில் கவுன்சிலர் சின்னசாமி, புலிப்பாண்டி, காளியப்பன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்