ஜன்னல் வழி ஏறி சீட் பிடிக்கும் பயணி "பஸ் இல்ல..மனசு கஷ்டமா இருக்கு" - கோயம்பேட்டில் முந்திய பயணிகள்

x

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பற்றாக்குறையால் பயணிகள் அவதி அடைந்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், அப்பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், நள்ளிரவு நேரத்தில் பல மணி நேரமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தூக்கமின்றி காத்துக்கிடந்தனர். பெண்கள், கைக்குழந்தைகளுடன் கடும் அவதி அடைந்தனர். மேலும், சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.அவ்வப்போது வந்த பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியதால், நின்று கொண்டே பயணிக்கும் நிலை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்