"போலீஸ் கேட்டா சிசிடிவி தருவியா?"-வீடு புகுந்து அரிவாளுடன் மிரட்டிய கோழி திருடர்கள்-பரபரப்பு காட்சி

x

கோவில்பட்டி அருகே சிசிடிவி பதிவை கொடுத்ததால் ஒரு குடும்பத்தை அரிவாளுடன் ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவில்பட்டி அருகே அத்தை கொண்டான் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா. இவரது கணவர் தாமோதர கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லாவண்யா தன் தாயுடன் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டிற்கு எதிரே சில நாட்களுக்கு முன்பாக கோழி திருடு போன நிலையில் அவர்கள் லாவண்யா வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கேட்டுள்ளனர். லாவண்யா கொடுத்த சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே தீபாவளியன்று லாவண்யா வீட்டிற்கு சென்ற சிலர் பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த லாவண்யாவும் அவரது தாயும் அவர்கள் குறித்து விசாரித்தனர். அப்போது கையில் அரிவாளை வைத்துக் கொண்டு ஒரு கும்பல் மிரட்டியது இதுதொடர்பான சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்