கொளுத்தி எடுத்த கோவை கிங்ஸ்.. போராடாமலே வீழ்ந்த திருப்பூர் தமிழன்ஸ்.. அதகளமாக ஆரம்பித்த TNPL

7-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா, கோவை நவ இந்தியாவில் உள்ள, தனியார் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் கண்கவர் வாணவேடிக்கையுடன் தொடங்கியது

இதில், நடப்பு சாம்பியன்களான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், முன்னாள் சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன

இந்நிலையில், கோவையில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின

இதில், டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி, 19.5 ஓவரில் அனைத்து டிக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் கோவை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

X

Thanthi TV
www.thanthitv.com