கோவை காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம்.. அதிவிரைவு படை துப்பாக்கிகளுடன் ரோந்து

x

கோவை மாநகரில், துப்பாக்கி ஏந்திய அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் எதிரொலியாக, மாநகரில் உக்கடம், கண்ணப்பன் நகர் பகுதிகளில் காவல்துறையுடன் இணைந்து அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு குழுக்களாக பிரிந்து 100க்கும் மேற்பட்டோர், துப்பாக்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்