தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு - சென்னையில் மீண்டும் போலீசார் அதிரடி

x

தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட விவகாரத்தில், சென்னையில் 3-வது முறையாக போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கில், சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளதாக தமிழக காவல்துறைக்கு மத்திய அரசு பட்டியல் அனுப்பியது. அதைத்தொடர்ந்து, சென்னையில் கடந்த 10 மற்றும்15-ஆம் தேதிகளில் தலா 4 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், 15 லட்ச ரூபாய் பணம் மற்றும் 38 வகையான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் 3-வது முறையாக சென்னையில் ஓட்டேரி, வேப்பேரி, ஏழு கிணறு, முத்தியால்பேட்டை ஆகிய 4 பகுதிகளில் சோதனைகள் நடைபெற்றன. சோதனை முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்