கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - இன்று விசாரணை

x

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

வாகன விபத்தில் இறந்த கனகராஜ் செல்போன் உரையாடல் பெற கூடுதல் கால அவகாசம் கேட்க்கப்பட்டதால் ஒரு மாதம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தனிப்படை போலீசார் யார் யாரிடம் விசாரணை நடத்தினார்கள், கனகராஜ் மற்றும் சயான் வாகன விபத்து குறித்த விசாரணை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் ,தீபு உள்ளட்ட 10 பேரும் ஆஜராகவுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்