கொடநாடு வழக்கு.. சயானின் ஜாமின் நிபந்தனையில் தளர்வு

x

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட10 பேர் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொரு திங்கட்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையுடன் சயனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த நிபந்தனையை தளர்த்த கோரி சயான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது, நிபந்தனையை தளர்த்த காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் வசித்து வருவதால் ஒவ்வொரு வாரமும் ஊட்டிக்கு வந்து கையெழுத்திடுவது சிரமமாக இருப்பதாக சயான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று ஆஜராக வேண்டுமென நிபந்தனையை தளர்த்தி நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்