கொடைக்கானலில் 'சொர்க்கத்தை' தேடி சென்று மாயமான 2 இளைஞர்கள் - விசாரணையில் திடுக் தகவல்

x

கொடைக்கானலில், போதைக் காளானுக்கு ஆசைப்பட்டு, வனப்பகுதியில் 2 இளைஞர்கள் மாயமான விவகாரத்தில், போதைக் காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோட்டையம் பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு இளைஞர்கள், போதைக்காளான் உபயோகப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், போதைக்காளானை தேடி, 5 பேர் வனப்பகுதிக்குள் சென்றபோது, 2 பேர் மாயமாகினர். பின்னர் உள்ளூர் மக்கள் உதவியுடன் 2 இளைஞர்களையும் போலீசார் மீட்டனர். இளைஞர்களுக்கு போதைக்காளான் கிடைத்தது எப்படி என போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பூண்டி கிராமத்தை சேர்ந்த சசிகுமார், பாலையா, கோபால கிருஷ்ணன் ஆகிய 3 பேர் விநியோகம் செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததுடன், அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் போதை காளான்க‌ளை பறிமுதல் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்