"என் போன் ஒட்டு கேட்கப்படுவதை அறிந்து ஹலோ மிஸ்டர் மோடி-ன்னு பேசினேன்.." - ராகுல் காந்தி கலகல பேச்சு

x

ஒரு கட்டத்தில் தனது போன் ஒட்டு கேட்கப்படுவதை தான் அறிந்து கொண்டதாகத் தெரிவித்த ராகுல் காந்தி, நகைச்சுவையாக தனது ஐபோனில் "ஹலோ மிஸ்டர் மோடி" என்று கூறியதாகக் குறிப்பிட்டார்.அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி வாஷிங்டனில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அதன் தாக்கம், நவீன வளர்ச்சி ஆகியவை குறித்து ராகுல்காந்தி விரிவாக விவாதித்தார். இந்தியாவில் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் பரப்ப வேண்டுமானால், அதிகாரம் ஒப்பீட்டளவில் பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த ராகுல் காந்தி, தரவு பாதுகாப்பில் பொருத்தமான விதிமுறைகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பெகாசஸ் ஸ்பைவேர் மற்றும் அதைப் போன்ற தொழில்நுட்ப பற்றிய பிரச்சினைகள் பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவித்த ராகுல்காந்தி, ஒரு கட்டத்தில் தனது போன் ஒட்டு கேட்கப்படுவது தெரியும் என்று தெரிவித்ததுடன், நகைச்சுவையாக தனது ஐபோனில் "ஹலோ மிஸ்டர் மோடி என்று தான் கூறியதாகவும் தெரிவித்தார். அரசு உங்கள் செல்போனை ஒட்டுக் கேட்க வேண்டும் என முடிவு செய்து விட்டால் யாராலும் தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்த நிலையில், தொழில்நுட்பத்தில் ராகுல்காந்தியின் அறிவைக் கண்டு வியந்து போனதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் புகழாரம் சூட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்