"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..." தேன் குரலுக்கு சொந்தக்காரர் இந்த தேயிலைத் தோட்ட தொழிலாளி..!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளி சோர்வு தெரியாமல் இருக்க பாடிய பாடல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...
கோயில் மேட்டைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி தான் இந்த ரெஜினா லூகாஸ்...
வேலை செய்யும் போது அலுப்பு தெரியாமல் இருப்பத்ற்காக இவர் பாடல் பாடுவது வழக்கம்...
எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தாலும் தேயிலை பறித்துக் கொண்டே தனது இனிமை மிகுந்த மயக்கும் குரலால் பாடும் ரெஜினாவின் குரல் அங்கு வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்து விடும்...
"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே" பாடலை தேயிலைகளை பறித்துக் கொண்டே ரெஜினா பாடுவது கேட்போரை புல்லரிக்கச் செய்கிறது...
Next Story
