அலறவிட்ட கிம் ஜாங் உன்...சீனாவிடம் ஓடிய அமெரிக்கா...சைடு கேப்பில் இந்தியாவுடன் கோல்

வடகொரிய ஏவுகணை சோதனைகளால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா சீனாவின் உதவியை நாடியுள்ளது...
x

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன... இந்நிலையில், வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க சீனாவின் உதவியை நாட உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் சீனா செல்ல திட்டமிட்டுள்ள பிளிங்கென், வடகொரிய ஏவுகணை பிரச்சினையை தீர்க்கும் முயற்சிகள் குறித்து சீனாவுடன் விவாதிக்க திட்டமிட்டுள்ளார்... முன் நிபந்தனைகள் இன்றி இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேம்பாடு குறித்து பேச தயார் என தெரிவித்த பிளிங்கென், கொரிய தீபகற்பத்தில் அணுவாயுதமற்ற நிலையைப் பார்ப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்