சாலையில் சென்ற கார் மீது ட்ராபிக் சிக்னல் விழுந்து பயங்கர விபத்து..நசுங்கிய கார்-சென்னையில் பரபரப்பு

x

சென்னை கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, பழுதடைந்து காணப்பட்ட சிக்னல், சாலையில் சென்ற கார் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருந்த சிக்னல், அதிக சத்தத்துடன் கார் மீது விழுந்ததில், காரின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால், ஓஎம்ஆர் சாலை - கேளம்பாக்கத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்