"சிறுநீரக பிரச்னை..எங்களுக்கு தெரியாமலே குழந்தைக்கு டயாலிசிஸ்.. இப்போ பாதமே கருகிடுச்சு" - போலீசார் மகளுக்கு நேர்ந்த கதி.. தலைமைச்செயலகம் முன் பாசப்போராட்டம்

x

சென்னை தலைமை செயலகம் முன்பு தனது 10 வயது மகளுடன் தலைமை காவலர் ஒருவர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காவலரின் மறியல் போராட்ட பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சென்னை, ஆவடி காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கோதண்டபாணி. இவர் ஓட்டேரி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்... இவரின் பத்து வயது மகளுக்கு மூன்று வயதில் இருந்தே சிறுநீரக பிரச்சினை இருந்து வந்துள்ளது...

மகளுடன் கொஞ்சி விளையாட வேண்டிய அவர், மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக மகளை தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்...

ஆனால் விதி, காவலர் கோதண்டபாணிக்கு மற்றுமொரு சுமையை கொடுத்து அதையும் தூக்கிக்கொண்டு ஓடு என விரட்டியது தான் பெரும் சோகம்...

தனது மகளுக்கு 3 வயதில் ஏற்பட்டுள்ள சிறுநீரக பிரச்சனையை சரி செய்ய, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றிருக்கிறார்...

தொடர்ந்து ஐந்து வருடங்களாக ஒரே மருத்துவமனையில், ஒரே மருத்துவரின் பரிந்துரையின் கீழ் மருந்துகளை உண்டும், சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார் காவலர் கோதண்டபாணியின் மகளான 10 வயது சிறுமி...

இந்நிலையில், 5 வருடங்களாக சிறுமி உட்கொண்டு வந்த மாத்திரையின் எதிர்விளைவு காரணமான சிறுமியின் கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது... இதையடுத்து அவர் மீண்டும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்..

அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தது காவலருக்கு பேரிடியாக இருந்தது...

ஆரம்பகால சிகிச்சையின் போது, சிறுமியின் ரத்தம் உறைந்து விட்டதாக மருத்துவர்கள் தவறாக கணித்ததாகவும், அதை சரி செய்ய மருத்துவர்கள் கொடுத்த மருந்தே சிறுமியின் காலில் அரிப்பு ஏற்பட்டு அவரின் பாதம் கருகியதோடு உடலில் உள்ள ரத்தம் கெட்டு போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதோடு இல்லாமல் சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல், சிறுமிக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதென்றும், அதிலும் எதிர்விளைவு ஏற்பட்டு சிறுமிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக காவலர் கூறி தலைமை செயலக முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது....



Next Story

மேலும் செய்திகள்