தொழிலதிபரைக் கடத்திய சம்பவம் ...உதவி ஆணையர் மீது பாய்ந்த வழக்கு - சிபிஐக்கு அதிரடி மாற்றம்

x

தொழிலதிபரை கடத்தி ஐந்தரை கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்ததாக காவல் உதவி ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை கடத்திச் சென்று, சிறைப்படுத்தி ஐந்தரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொழிலதிபர் ராஜேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதேபோல் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவகுமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கில், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதாகவும் கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்