பிறந்த 10-வது நாளில் கடத்தப்பட்ட குழந்தை.. தாயை சிறையில் அடைத்த போலீஸ்.. கடத்தல் பணத்திற்காகவா? நரபலிக்கா?

x

திருச்சியில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில், நீதிபதியின் உத்தரவின் பேரில் குழந்தையின் தாயை போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மங்கமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜானகி. இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த குழந்தை 10 ஆவது நாளிலே கடத்தப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த குழந்தையின் தாய் ஜானகியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை ஜானகி தெரிவித்ததால் போலீசார் குழப்பமடைந்தனர். மேலும், விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், வழக்கறிஞர் பிரபுவின் இரண்டாவது மனைவி சண்முகவள்ளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், குழந்தை கடத்தப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்காததால், நீதிபதியின் உத்தரவின் பேரில் ஜானகியை போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்தார்களா?, அல்லது நரபலி கொடுக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்