"கோலி ஓய்வு பெற வேண்டும்" - அக்தரின் கருத்தால் கொதித்த ரசிகர்கள்

x

டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறி உள்ளார். இது தொடர்பாக பேசிய அக்தர், பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறந்த இன்னிங்ஸை கோலி ஆடியதாகவும், அதே சமயம் கோலி தனது முழு திறனையும் டி20 போட்டிகளிலேயே செலுத்தக் கூடாது என்றும் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ்போல், ஒருநாள் போட்டிகளில் ஆடினால் கோலி 3 சதம் அடித்திருப்பார் என்றும் அக்தர் கூறி உள்ளார். அக்தரின் இந்த கருத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்