ராவணன் வேடத்தில் நடிக்கிறாரா யஷ்...? அப்போ KGF 3...?

ராவணன் வேடத்தில் நடிக்கிறாரா யஷ்...? அப்போ KGF 3...?
x

KGF என்ற மூன்றெழுத்தால் இந்திய சினிமாவின் உச்சம் தொட்டவர் கன்னட நடிகர் யஷ்.


பான் இந்தியா படமாக வெளியான KGF, பாக்ஸ் ஆஃபிஸில் பட்டைய கிளப்பி கன்னட சினிமாவின் மீதான பார்வையையே மாற்றியது.

ராக்கி பாய் வேடத்தில் மிரட்டிய யஷ், இளைஞர்களின் ஆதர்ச நாயகன் ஆகிவிட்டார்.


KGF முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான இரண்டாவது பாகமும் மாபெரும் வெற்றியை பெற்று, ஓட்டு மொத்த இந்தியாவையும் பான் இந்தியா படங்களை நோக்கி திருப்பியது.


படத்தின் இறுதியில் ராக்கி பாய் கதை முடிந்தது என சோகமாக ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியேற முயன்ற போது

KGF CHAPTER 3 என ஸ்கீரினில் தோன்றிய காட்சியே ராக்கி பாய் ரசிகர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது.

KGF பட இயக்குநர் பிரசாந்த் நீல், பாகுபலி பட புகழ் பிராபஸை வைத்து சலார் என்ற ஒரு படத்தை இயக்கி வருகிறார்.




இந்த படத்தை முடித்த பிறகு தான் KGF 3-க்கான பணிகளை பிரசாந்த் நீல் தொடங்குவார் என தெரிகிறது.

இதற்கிடையில் யஷ் அடுத்து நடிக்க உள்ள படம் எது என்பது பற்றிய அப்டேட் அறிந்து கொள்ள அவரது வெறித்தனமான ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்த சூழலில் ராமாயணத்தை தழுவி எடுக்கப்படும் படத்தில் ராவணன் கேரக்டரில் யஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

ராமராக ரன்பீர் கபூர் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், ராவணன் படம் தொடர்பாக இறுதி முடிவு இதுவரை எதுவும் எடுக்கப்படவில்லை என நடிகர் யஷ்ஷின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து சொல்லப்படுகிறது. இந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் யஷ் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பான சந்திப்புகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில், நிறைய ஸ்கிரிப்டுகளை யஷ் கேட்டு வருவதாகவும், மிக விரைவில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் எனவும் நடிகர் யஷ்ஷின் தரப்பில் கூறப்படுகிறது.

அது ஒரு மெகா பட்ஜெட் படமாக அமையுமா?....பான் இந்தியா படமாக இருக்குமா? ஆக்‌ஷன் பிளாக் பஸ்டராக இருக்குமா?.. என நடிகர் யஷ் வெளியிட போகும் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்