நெருங்கியது மகரவிளக்கு பூஜை... தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு

x

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்து நடைசாத்தப்பட்ட நிலையில், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதற்காக ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஜனவரி 11ம் தேதி இரவு எருமேலியில் பேட்டை துள்ளல் மற்றும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்