ஆடையை பிடித்து இழுத்து பெண்ணை வேகமாக கீழே தள்ளிய நபர் - அதிர்ச்சி காட்சி

x

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, வயலில் மண் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் அருகே நெட்டையம் பகுதியை சேர்ந்த உஷா என்பவரது வீட்டருகே, வயலில் மண் நிரப்பும் பணியில் சிலர் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தப் பெண், மண்ணை ஏற்றி வந்த லாரியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த நபர் ஒருவர், உஷாவை கீழே தள்ளிவிட்டு தாக்கும் காட்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்