தலையில் அடித்துக்கிட்டு கத்திய தந்தை.. பசியால் துடித்த பச்சிளங்குழந்தைகள் - தாயாய் மாறிய காவலர்கள்

x

கேரளாவில் தனது குழந்தைகளுடன் காவல் நிலையம் வந்து அட்டகாசம் செய்த போதை ஆசாமியிடம் இருந்து குழந்தைகளை மீட்ட போலீசார், அழுத பிஞ்சுகளுக்கு தாங்களே தாயாக மாறி உணவூட்டி மகிழ்ந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது... பெரும்பாவூரைச் சேர்ந்த அஸ்வின் என்பவர் 24 மணி நேரமும் போதையிலேயே இருந்து தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால், அவரது மனைவி அஸ்வினையும் அவரது குழந்தைகளையும் விட்டு பிரிந்து சென்றுள்ளார்... அப்போதும் திருந்தாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்த அஸ்வின், முழு நேர போதைக்கு அடிமையாகி தான் மன நிலை பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறி தனது 2 மற்றும் 1 வயதே ஆன குழந்தைகளுடன் கோடநாடு காவல் நிலையம் வந்து திடீரென்று கத்திக் கூச்சலிடத் தொடங்கினார்...


Next Story

மேலும் செய்திகள்