கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து வந்த மாற்றுத்திறனாளிகள்

x

கேரளா மாநிலத்தில், சுமார் ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து பேரணி சென்றது காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. கேரள மாநிலம், திருச்சூரில் கடந்த ஒரு வாரமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. புத்தாண்டு வரை தொடரும் இந்தக் கொண்டாட்டத்தில், ஏராளமானோர் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து பேரணியாக சென்றனர். சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர். ஆடம்பர இரு சக்கர வாகனங்களில் பவனி வந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்களுடன், மாற்றுத்திறனாளிகளும் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து சக்கர நாற்காலியில் பவனி வந்தது பலரையும் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்