துக்க வீட்டுக்கு சென்று காரில் திரும்பிய ஒரே குடும்பத்தில் 4 பேர் துடிதுடித்து பலி

கேரள மாநிலம் திருச்சூரில், தனியார் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
x

கேரள மாநிலம் எல் துரத்து பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் வின்சென்ட், அவரது மனைவி மேரி, சகோதரர்கள் இருவர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், இறுதிச் சடங்குக்கு சென்று விட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சூர் அருகே வந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் வந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், நான்கு பேரின் சடலத்தையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்