அமெரிக்க நீதிபதியாக 2வது முறையாக பதவியேற்ற கேரள பெண்

x

அமெரிக்க நீதிபதியாக 2வது முறையாக கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் பதவியேற்றுள்ளார்...கேரள மாநிலம் திருவல்லாவைச் சேர்ந்த ஜூலி.ஏ.மேத்யூ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் நீதிபதியாக பதவியேற்றதன் மூலம், அங்கு நீதிபதியாகும் முதல் இந்திய வம்சாவளி பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார்... இந்நிலையில், தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் பென்ட் கவுன்டியின் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், இதற்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கி குடியரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஆண்ட்ரூ டார்ன் பர்க்கைத் தோற்கடித்தார். கேரளாவில் தனது கணவரின் சொந்த கிராமத்தில் அமைந்துள்ள வீட்டில் காணொலி வாயிலாக பதவியேற்றுக் கொண்ட ஜூலி, தன் பணியை தான் மிகவும் நேசிப்பதாக பூரிப்பு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்