"யாருகிட்ட வந்து வாலை ஆட்டுற..?இந்தா....!"வா என கூப்பிட்டு நாயை பறக்க விட்ட இளைஞர் - சிசிடிவி காட்சி

x

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தெருநாயை, வீட்டு வளாகத்தில் தூக்கி வீசிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். நெய்யாற்றின் கரை பகுதியில் நிஷின் ராஜ் என்பவரது வீட்டிற்கு வெளியே தெரு நாய் ஒன்று படுத்திருந்த‌து. அப்போது, அந்த வழியாக வந்த மூன்று பேர் அந்த நாயை கூப்பிட்டதும், ஆசை ஆசையாய் வாலை ஆட்டிக் கொண்டு சென்றது. அப்போது திடீரென நாயை பிடித்து தூக்கிய இளைஞர், நிஷின் ராஜின் வீட்டு வளாகத்திற்குள் வீசிவிட்டு ஓட்டம் பிடித்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால், போலீசார் வழக்கு பதிவு செய்து, நாயை தூக்கி வீசிய இளைஞரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்