கொட்டோ கொட்டுனு கொட்டிய வருவாய் சபரிமலையில் 24 நாள்ல இவ்ளோ கோடியா..? | Sabarimala Temple

சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த 24 நாட்களில் 125 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக, தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார். சபரிமலை கோயில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 நாட்களில் 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். உண்டியல் காணிக்கை, அப்பம், அரவணை பிரசாத விற்பனை மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com