ஹெல்மெட் எங்கே? என நிறுத்திய காவலர்! "நீ வேணா சண்டைக்கு வா" போலீசாரிடம் சீறிய 'ஆளுங்கட்சி பிரமுகர்'

x

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே, ஆளுங்கட்சி பிரமுகர் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வவருகிறது. காயங்குளம் பகுதியை சேர்ந்த அஸ்கர் என்பவர், கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி குழு நிர்வாகியாக உள்ளார். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், காவல்துறை அதிகாரியுடன் அஸ்கர் வாய் தகராறில் ஈடுபட்டதுடன், தன்னை தாக்குமாறு வம்பு இழுக்கும் காட்சியை அதில் இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்