மருமகளை நிர்வாண படுத்தி கணவன்,மாமியார் செய்த கொடூரம் - கேரளாவில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவம்

x

கேரளாவில் மாந்திரீகம் என்ற பெயரில் சித்திரவதை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் கணவரும், மாமியாரும் கைது செய்யப்பட்டனர்.

கொல்லத்தை அடுத்த அட்டிங்கலைச் சேர்ந்த பெண்ணுக்கும், சடையமங்கலத்தைச் சேர்ந்த நபருக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணை மாந்திரீகம் என்ற பெயரில் கணவரின் வீட்டார் துன்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. கணவரும், மாமியாரும் நோயிலிருந்து விடுபட தன்னை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தி, கணவர் தாக்கியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும், மாந்திரீகம் செய்வதாக வந்த நபர்கள் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், கணவரிடம் இருந்து பிரிந்து வந்து தாய் வீட்டில் வசித்து வரும் அந்தப் பெண், விவாகரத்து கோரியுள்ளார். இலந்தூர் நரபலி சம்பவத்துக்குப் பிறகு, அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையே பல்வேறு இளைஞர் அமைப்பினர் கணவர் வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கணவரையும், மாமியாரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்