கேரளவில் அதிகம் பரவும் புதிய வைரஸ் - கொத்து கொத்தாக செத்து மடியும் 'செல்ல பிராணிகள்'.. மனிதர்களுக்கும் பரவுமா..?

x

கேரள மாநிலம் கொல்லத்தில் நாய்களிடையே பரவும் புதிய வைரஸ் தொற்றால், கடந்த மூன்று மாதங்களில் ஆயிரக்கணக்கான நாய்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது


கொல்லத்தில் சுமார் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு கடந்த மூன்று மாதங்களாக ஏராளமான தெரு நாய்கள் அதிகளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் தெருநாய்களிடையே பரவும் கேனைன் டி வைரஸ் என்றும், இந்த வைரஸ், பாதிப்புக்குள்ளான நாய்களிடமிருந்து மற்ற நாய்களுக்கு பரவும் என்றும் கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவாது என கூறிய அவர்கள், வைரஸ் பாதிப்பால் நாய்கள் மூளை பாதிப்புக்குள்ளாவதோடு, ரேபிஸ் தொற்று போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் எனவும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்