30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி - ஓட்டுநர் உட்பட 3 பேர் பலி.. நெஞ்சை உலுக்கும் கோர விபத்து

x
  • கேரள மாநிலம் மலப்புரத்தில் 30 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விழுந்த‌தில், ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • கோழிக்கோட்டில் இருந்து திருச்சூர் சாலக்குடிக்கு வெங்காயம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது.
  • வட்டப்பாறையில் உள்ள ஆபத்தான வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, 30 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த‌து.
  • இதில், ஓட்டுநர் உட்பட 3 பேர் லாரியில் சிக்கினர். கேபின் பகுதியை வெட்டி எடுத்து, அவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
  • ஆனால், படுகாயமடைந்த மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
  • அந்த சாலையில், ஒரே மாத‌த்தில் 4வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்