முதல் கணவரோடு சேர்ந்ததால் ஆத்திரம்... பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு... 2வது கணவன் வெறிச்செயல்...

• கண்ணூர் அருகே தளிப்பரம்பு பகுதியைச் சேர்ந்த ஷாகிதா என்பவர், அப்பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். • திங்கள் கிழமை மாலை பணி முடித்து வீட்டிற்கு சென்றுள்ளார். • அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற ஒருவர், ஷாகிதா முகத்தில் திடீரென ஆசிட் ஊற்றினார். • ஷாகிதாவின் அருகே நடந்து சென்ற நபர் மீதும் திராவகம் சிந்திய நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். • இதனிடையே ஆசிட் ஊற்றிய நபரை பொதுமக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். • விசாரணையில், ஷாகிதா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், முரண்பாடு காரணமாக அவரைப் பிரிந்து விட்டார். • பின்னர் தனியார் கல்லூரியில், ஆய்வக ஊழியராக பணிபுரியற்றி வரும் அஷ்கர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. • ஓரிரு மாதங்களில் அஷ்கருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து முதல் கணவருடன் மீண்டும் சேர்ந்தார். • இதனால் ஆத்திரமடைந்த ஆஸ்கர், ஷாகிதா மீது திராவகம் வீசியதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com