சூட்கேசில் அடைக்கப்பட்ட மனித உடல்பாகங்கள்... ஓட்டல் ஓனரை கொடூரமாக கொன்ற காதல் ஜோடி...

x

சூட்கேசில் அடைக்கப்பட்ட மனித உடல்பாகங்கள்... ஓட்டல் ஓனரை கொடூரமாக கொன்ற காதல் ஜோடி...

ஹனிடிராப் மூலம் ஓட்டல் ஓனருக்கு வலை... பணத்திற்காக வெட்டி கொன்ற பயங்கரம்...

இரண்டு சூட்கேஸ்ல மனித உடல் பாகங்கள் துண்டு துண்டா மீட்கப்பட்டிருக்கு. இரக்கமே இல்லா அந்த கொடூர கொலையை செய்த குற்றவாளிகள் யார்?

கேரளா மாநிலம், பாலக்காடு காட்டுப்பகுதி… நீரோடை அருகே சந்தேகத்திற்கிடமாக இரண்டு சூட்கேஸ்கள் கிடந்துள்ளது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியோடு சூட்கேஸை மீட்டனர்.


அந்த சூட்கேஸிற்குள் இருந்தது பணமோ, நகையோ இல்லை… இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட மனித உடல்கள்.

இந்த செய்தி கேரளா முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீட்கப்பட்ட சடலம் யாருடையது? கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடை தேடி போலீசார் பம்பரமாக சுழன்றனர்.


முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் சித்திக் என்று தெரிய வந்திருக்கிறது.

கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்திலுள்ள திருர் சித்திக்கின் சொந்த ஊர்.

58 வயதாகும் இவர் கோழிக்கோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார்.

சொந்த ஊரிலிருந்து அவ்வபோது கோழிக்கோடு வந்து செல்லும் சித்திக், ஹோட்டல் வேலையை முடித்துவிட்டு ஓரிரு நாட்களில் ஊருக்கு திரும்புவது வழக்கம்.

ஆனால், கடந்த மூன்று நாட்களாக சித்திக் வீடு திரும்பவில்லை.

இதனால் பதட்டமடைந்த சித்திக்கின் குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடைசியாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.


உடனே போலீசார் சித்திக்கின் ஹோட்டலில் இருந்து விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அப்போது தான் சித்திக் ஹோட்டலில் வேலைச் செய்து வந்த முகமது சிபில் என்பவரும் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். அதில், காணாமல் போன சித்திக் , முகமது சிபில் மற்றும் ஒரு இளம் பெண் அருகிலிருந்த லாட்ஜிற்கு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

சில மணி நேரம் கழித்து, இரண்டு சூட்கேசுடன் வெளியே வந்த முகமது சிபிலும் அந்த இளம்பெண்ணும் ஒரு காரில் ஏறி சென்றிருக்கிறார்கள்.

இந்த காட்சிகளை பார்த்ததும் போலீசாருக்கு நடந்த அத்தனையும் தெள்ளத்தெளிவாக புரிந்துவிட்டது.

உடனே முகமது சிபிலையும் அந்த இளம் பெண்ணையும் மடக்கி பிடித்து விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது தான் நடந்த பயங்கரம் வெளிச்சதுக்கு வந்திருக்கிறது.


முகமது சிபில் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்புதான் சித்திக்கின் ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் சிறைக்குச் சென்றுவந்த முகமது சிபில் சித்திக்கிடம் பணம் நடமாடுவதை நோட்டமிட்டுள்ளார்…

அந்த பணத்தை அபகரிக்க திட்டமிட்ட முகமது சிபில் தனது காதலி ஃபர்கானாவை சித்திக்கிற்கு இன்ட்ரோ கொடுத்திருக்கிறார்.


இருவரும் ஹனிட்ராப் செய்து சித்திக்கிடமிருந்து பணத்தை கரந்ததாக சொல்லப்படுகிறது.

இதன் தொடர்சியாக தான் சித்திக் துண்டுதுண்டாக வெட்டி கொல்லப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், காதல் ஜோடியிடம் என்ன காரணத்திற்காக சித்திக் கொல்லப்பட்டார் என்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.


Next Story

மேலும் செய்திகள்