மலைவாழ் பெண்களிடம் அத்து மீறல் - மன்னிப்பு கேட்ட கேரள வனத்துறை அதிகாரிகள்

x

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசித்து வரும் மலைவாழ் பெண்களிடம் அத்து மீறிய கேரள வனத்துறை அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையாடிவாரத்தில் வாழும் மலைவாழ் பெண்கள் மலைப்பகுதிக்குள் தேன் எடுக்க சென்றனர். அப்போது அவ்வழியாக தமிழகத்திற்கு வந்த கேரள வனத்துறையினர் அங்கு தேன் எடுத்துக் கொண்டிருந்த சரசா மற்றும் சின்ன தாய் அம்மாள் ஆகிய இரு பெண்களிடம் அத்துமீறிய சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தந்தி டிவியில் ஒளிபரப்பானது. இதனை அடுத்து மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், காவல் துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ் ஆகியோர் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் செய்தியின் எதிரொலியாக கேரள வனத்துறையின் பெரியார் கோட்ட வனச்சரகர் அகில் பாபு மற்றும் வனவர்கள் நேரில் வந்து கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ் முன்னிலையில் வைத்து மலைவாழ் பெண்களிடம் நடந்த தவறை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டனர். வருத்தம் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜர் படுத்தவும் உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்