"லாட்டரி, சாராயம் விற்று பணம் சம்பாதிக்கும் கேரள நிதியமைச்சர்-தம்மை விமர்சிக்க கூடாது" - கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

x

லாட்டரி, சாராயம் விற்று பணம் சம்பாதிக்கும் கேரள நிதியமைச்சர்-தம்மை விமர்சிக்க கூடாது" - கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

லாட்டரி, சாராயம் விற்று பணம் சம்பாதிக்கும் கேரள அரசின் நிதி அமைச்சர் தம்மை விமர்சிக்க கூடாது என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியுள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கேரள பல்கலைக்கழகத்தில் உள்ள செனட் உறுப்பினர்கள் 15 பேரை அவர் திரும்பப் பெற்றதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை வலுத்து வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்,

லாட்டரி, மது போன்றவற்றை விற்று பணம் சாம்பாதிக்கும் கேரள அரசின் நிதியமைச்சர் தம்மை விமர்சிக்க கூடாது என்றார். இளைஞர்களுக்கு வேலை இல்லை என்றும், மக்கள் பணத்தை கட்சி செலவுக்கு பயன்படுத்துவதாகவும் ஆளுநர் குற்றம்சாட்டினார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வது ஆளுநரின் அதிகாரம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை ஆரிப் முஹம்மது கான் சுட்டிக்காட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்