பணக்காரர்கள் தான் குறி... கேரள எல்லையில் மாட்டிய இளைஞர்கள் - சிக்கிய வீரியமிக்க போதைப்பொருள்

x
  • தென்காசியில் இருந்து கேரள மாநிலம் புனலூருக்கு சென்ற கேரளா அரசு பேருந்தை நிறுத்தி, அதில் உள்ள பயணிகளை போலீசார் சோதனை செய்தனர்.
  • அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 2 இளைஞர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 32 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
  • அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
  • அதில், கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியை சேர்ந்த முகமது மற்றும் இம்ரான் என தெரியவந்தது.
  • மேலும், பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை, ஒரு கிராம் 10 ஆயிரம் ரூபாய் என, வசதி படைத்த நபர்களை குறிவைத்து விற்பனை செய்ய இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
  • கைதான இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்