பனி மேகத்தில் மிதக்கும் கடவுள் தேசம் - ரம்மியமான காட்சி

x

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறில் ஏழுமலை மற்றும் தேவிகுளத்தில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதனால் தேயிலை தோட்டங்கள் மெல்லிய பனியால் மூடப்பட்டு, வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

கடந்த சில நாட்களாக வெப்பநிலை 9 டிகிரியிலிருந்து 6 டிகிரி, 5 டிகிரி என படிப்படியாக குறைந்து வந்தது.

இந்த நிலையில் ஏழுமலை , தேவிகுளம், எஸ்டேட் பகுதிகளில் வெப்பநிலை பூஜ்யம் டிகிரியை தொட்டது. இதனால், உறைபனி ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்