ஊழல் வழக்கில் சிக்கிய கேரள முதல்வரின் முதன்மை செயலாளர்.. சிபிஐ தீவிர விசாரணை

கேரளாவில் லைஃப் மிஷன் ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கரிடம் சிபிஐ அதிகாரிகள் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, கொச்சியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி நேற்று ஆஜரான அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையை முடித்து வெளியே வந்த சிவசங்கர் செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். லைஃப் மிஷன் வழக்கில் சிவசங்கர் விசாரணைக்கு அழைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

X

Thanthi TV
www.thanthitv.com