திடீரென நீரில் மூழ்கிய படகு வீடு.. புத்தாண்டு கொண்டாட சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்

x

புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாட ஆலப்புழா சென்ற ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் படகு வீடு நீரில் மூழ்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாட ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் படகு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

நேற்றிரவு இந்த படகு வீடு திடீரென்று நீரில் மூழ்கியுள்ளது... இதைக் கண்ட அருகில் இருந்த படகு ஊழியர்கள் நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற முயன்றனர்...

அப்போது ராமச்சந்திர ரெட்டி என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அவருடன் வந்த அவரது மகன் ராஜேஷ் ரெட்டி, உறவினர்கள் நரேந்தர், நரேஷ், படகு ஊழியர் சுனந்தன் ஆகிய நால்வரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

படகின் அடிப்பகுதியில் உள்ள பலகை உடைந்ததால் தண்ணீர் படகு வீட்டிற்குள் புகுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்