பள்ளி வேனிலிருந்து இறங்கிய சிறுமி...அடித்து தூக்கிய ஆட்டோ... அதிரவைக்கும் வீடியோ காட்சி | Student

x

கேரளாவில் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி ஒருவர் ஆட்டோ மோதி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி பேருந்தின் உரிமம் மற்றும் ஆட்டோ ஓட்டுநரின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஷஃப்னா ஷெரின். இவர் பள்ளி முடிந்து மதியம் 1 மணியளவில் பள்ளிப்பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் அருகில் உள்ள சாலையில் இறங்கிய ஷெரின், சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.


Next Story

மேலும் செய்திகள்