கேரள நடிகை தாக்கப்பட்ட வழக்கு.. நடிகை குறித்து தவறாக பிரசாரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்
கேரளாவில் நடிகை தாக்கப்பட்ட வழக்கில் அவர் குறித்து தவறாக சைபர் பிரசாரம் செய்த ஷான் ஜார்ஜ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
கேரளாவில் நடிகை தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 2017ல் வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அப்போது அந்த குழுவானது நடிகர் திலீப்பிற்கு எதிரான சதி இருப்பதாக காட்டுவதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த குழுவில் இடம்பெற்றிருந்த ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்டவை பி.சி. ஜார்ஜின் மகன் ஷான் ஜார்ஜின் போனில் இருந்து திலீப்பின் சகோதரர் அனூப்பின் செல்போனுக்கு அனுப்பியதை குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து கோட்டயம் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணையில் இறங்கிய நிலையில் ஈரட்டுப்பேட்டையில் உள்ள ஷான் ஜார்ஜின் வீட்டில் சோதனை நடந்தது.
Next Story