போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை - இலங்கை அரசு எச்சரிக்கை

x

போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம், நச்சுப்பொருள், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

5 கிராமிற்கு அதிகமாக ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது அப்போதை பொருளை விற்பனை செய்தாலோ மரண தண்டனை வரை விதிக்கக்கூடிய வகையில் கொண்டுவரப்பட்ட அச்சட்டம், தற்போது அமலுக்கு வந்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

பள்ளி குழந்தைகள் 5 கிராமுக்கு அதிகமாக ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தால், அவர்கள் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட வாய்ப்பிருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்