கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்து... தமிழகம் வந்த இறந்தவர்களின் உடல்

x

புனித யாத்திரைக்காக கடந்த சில நாள்கள் முன்பு கேதர்நாத் சென்றிருந்த 3 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததில், அவர்களது உடல்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத்திற்கு சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பிரேம் குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேர் சென்றிருந்தனர்.

இவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், மொத்தம் 7 பேர் உயிரிழந்த நிலையில், இவர்களது உடல்கள் சென்னை கொண்டு வரப்பட்டது. அமைச்சர் செஞ்சி மஸ்தான், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தி, உறவினர்களிடம் ஒப்படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்